/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 19, 2024 06:48 AM

விழுப்புரம்: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. பள்ளி தாளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முதல்வர்கள் சுமதி, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
போட்டியில் பிளஸ் 1 மாணவர் பிரதாப், 10ம் வகுப்பு மாணவர் சண்முகபிரியன் அணி முதலிடத்தையும், பத்தாம் வகுப்பு மாணவர் தேவதர்ஷன், பிளஸ் 1 மாணவர் மோகனகிருஷ்ணன் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி செயலாளர் ஜனார்த்தனன், பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனிச்சம்பாளையம்
அனிச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் ஜனகன் தலைமை தாங்கினார்.
போட்டியில், 8 ம் வகுப்பு மாணவிகள் ராதிகா, மணிமாலா அணி முதலிடத்தையும், 6ம் வகுப்பு மாணவிகள் சாதனா, தர்ஷினி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் வடக்கு மண்டல பொருப்பாளர் மற்றும் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஆசைதம்பி, விழுப்புரம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.