நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு, மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து காலை 10:00 மணிக்கு உற்சவர் ஆண்டாள் தாயார் சமேத சீனிவாச பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 11:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, மாகா தீபாராதனையுடன் வழிபாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.