/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுரைவீரன் கோவிலில் 15ம் தேதி திருவிளக்கு பூஜை
/
மதுரைவீரன் கோவிலில் 15ம் தேதி திருவிளக்கு பூஜை
ADDED : ஏப் 13, 2025 03:57 AM
விழுப்புரம்;: விழுப்புரம் மதுரைவீரன் பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் கோவிலில் சித்திரை விழாவையொட்டி வரும் 15ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.
விழா கடந்த 7ம் தேதி பந்தக்கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நாளை 14ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6:00 மணிக்கு உற்சவர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
6:30 மணிக்கு மதுரைவீரன் வாகனம் குதிரை கொண்டு வருதல், 8:30 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 15ம் தேதி மாலை 4:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணிக்குள் திருவிளக்கு பூஜை நடக்கிறது.
பூஜைக்காக பெண்கள் வீட்டிலிருந்து குத்துவிளக்கு, தீபாராதனை தட்டு, பஞ்சபாத்திரம், கைமணி கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் மொபைல் 9786004569, 9944602023 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் வாசுதேவன் தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

