/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இப்படி பண்றீங்களே ஆபீசர்ஸ்; மாற்றுத்திறன் மகனுடன் பெற்றோர் கண்ணீர்
/
இப்படி பண்றீங்களே ஆபீசர்ஸ்; மாற்றுத்திறன் மகனுடன் பெற்றோர் கண்ணீர்
இப்படி பண்றீங்களே ஆபீசர்ஸ்; மாற்றுத்திறன் மகனுடன் பெற்றோர் கண்ணீர்
இப்படி பண்றீங்களே ஆபீசர்ஸ்; மாற்றுத்திறன் மகனுடன் பெற்றோர் கண்ணீர்
ADDED : மார் 18, 2025 01:18 AM

விழுப்புரம்: மாதாந்திர உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், கை, கால் இழந்த மகனை, பெற்றோர் காய்கறி பெட்டியில் துாக்கி வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கேடேசன், 60; கூலி தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள், 58. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மகன் கோவிந்தராஜ், 26, பிறவியிலேயே கை, கால் இழந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு மூன்று ஆண்டுகளாக அரசின் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வந்துள்ளது.
திடீரென ஆறு மாதமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும், முறையான பதில் இல்லை. விரக்தியடைந்த வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதி, நேற்று காலை, கோவிந்தராஜை, காய்கறி பெட்டியில் வைத்து மொபட்டில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக குறை கேட்பு கூட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்கள், பிளாஸ்டிக் பெட்டியில் கோவிந்தராஜை வைத்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகனை வைத்து கஷ்டப்படுகிறோம்.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் கேட்டபோது, 'உங்கள் மகன் பெயர் லிஸ்ட்டில் இல்லை; அவர் இறந்துவிட்டார். ஏமாற்றி உதவித்தொகை பெறுகிறீர்களா?' என்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மூன்று மாதமாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மகனுக்கு ஆதார் அட்டை கேட்கின்றனர். இதுவரை பதிவு செய்யவில்லை.
நாங்கள் ஆதார் பதிய சென்றால், மகனின் கை, கால்கள் சரியாக இல்லாததால், கைரேகை பதிய முடியாமல் திருப்பி அனுப்புகின்றனர். செய்வதறியாது தவிக்கிறோம். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.