/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறவைகளை வேட்டையாடி சமைத்த மூவர் கைது: வனத்துறை அதிரடி
/
பறவைகளை வேட்டையாடி சமைத்த மூவர் கைது: வனத்துறை அதிரடி
பறவைகளை வேட்டையாடி சமைத்த மூவர் கைது: வனத்துறை அதிரடி
பறவைகளை வேட்டையாடி சமைத்த மூவர் கைது: வனத்துறை அதிரடி
ADDED : நவ 21, 2024 12:37 AM

விழுப்புரம்: திண்டிவனம் அருகே வன விலங்குகளை வேட்டையாடி சமைத்த மூவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே கீழ் கூடலுார் பகுதியில் உள்ள நெல்கழனியில் ஒரு கொட்டகையில், பறவைகள் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில், நேற்று முன்தினம் வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு ஒரு கொட்டகைக்குள் 3 பேர், கறி சமைத்து கொண்டிருந்ததை கண்டு, அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள், திண்டிவனம் அருகே நத்தமேடு பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு மகன்கள் பிரகாஷ்,29; ஜெமினி,22; தமிழரசன்,20; ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், பறவை மாமிசத்தை சமைத்ததும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த 28 நாட்டு வெடிகுண்டுகள், மாமிசம் பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி, சுருக்கு கம்பிகள் மற்றும் இரு இருசக்கர வாகனங்கள், கேஸ் டார்ச் மற்றும் கத்தி, டார்ச் லைட் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்ததோடு, பிரகாஷ் உட்பட மூவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

