ADDED : ஜன 26, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற மூவரை போலீார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கே.கே.ரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் அண்ணா நகர் விக்னேஷ்,26; என்பவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த 56 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் கஞ்சா விற்ற முத்தோப்பு அகரம்பேட்டையை சேர்ந்த நந்தகுமார்,19; பிரகாஷ்,26; ஆகியோரை மேற்கு சப் இன்ஸ்பெக்டர் ராபட் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 12 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபைல்போன், பைக் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய விழுப்புரத்தை சேர்ந்த முகமது ஆசாத் என்பவரை தேடிவருகின்றனர்.