/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளத் தொடர்பில் வாலிபர் அடித்து கொலை; விபத்தில் இறந்ததுபோல உடல் சாலையில் வீச்சு விழுப்புரம் வாலிபர் உட்பட 3 பேர் கைது

ADDED : டிச 01, 2024 07:04 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வாலிபர் கொலை வழக்கில், மூன்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையோரம் கடந்த 28ம் தேதி, அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கிடந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.
இதில், இறந்த நபர், தேனி மாவட்டம், உத்தமபாளையம் ரங்கசாமி மகன் அரவிந்த், 24; என்பது தெரிய வந்தது. விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச் உத்தரவின் பேரில், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில், தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
அதில் தெரிய வந்துள்ளதாவது:
சென்னையில் வசித்து வந்த விழுப்புரம் அடுத்த வெங்கத்துார் கிராமத்தைச் சேர்ந்த செல்வகஜபதி என்பவரும், கொலை செய்யப்பட்ட அரவிந்த்தும் நண்பர்கள்.
செல்வகஜபதியின் மனைவியுடன் அரவிந்த் நெருங்கி பழகியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த செல்வகஜபதி, செங்கல்பட்டு சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து, கடந்த 28ம் தேதி சென்னை மறைமலை நகர் அருகே அரவிந்த்தை தாக்கி, கொலை செய்துள்ளனர்.
அவர் விபத்தில் இறந்ததைப் போல், போலீசாரை நம்ப வைப்பதற்காக, உடலை, விழுப்புரம் விராட்டிகுப்பம் புறவழிச்சாலையோரம் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய செல்வகஜபதி, 29; அரவிந்தன், 27; கணேசன், 27; ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோத தகராறில் அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் தலையில்லாத உடலை, 65. கி.மீ. துாரம் நள்ளிரவில் பைக்கில் எடுத்து வந்து விழுப்புரம் அருகே திருவக்கரை பகுதியில் உள்ள கல்குவாரியில் வீசிவிட்டு சென்றனர்.
வானுார் போலீசார் சிறப்பாக துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்தனர்.
அதே போல இச்சம்பவத்திலும், சென்னையில் அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை காரில் எடுத்து வந்து விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையோரம் பட்டப் பகலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.