/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து டிரைவர் உட்பட மூவர் படுகாயம்
/
டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து டிரைவர் உட்பட மூவர் படுகாயம்
டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து டிரைவர் உட்பட மூவர் படுகாயம்
டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து டிரைவர் உட்பட மூவர் படுகாயம்
ADDED : மே 07, 2025 11:53 PM
வானூர்: கிளியனூர் அருகே டேங்கர் லாரி - தனியார் பஸ் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உட்பட மூவர் காயமடைந்தனர்.
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலுாருக்கு நேற்று காலை 7:30 மணிக்கு, டிஎன் 49.பி எக்ஸ். 4073 பதிவெண் கொண்ட தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சை கடலுார் மஞ்சக்குப்பம் டிரைவர் செல்வம் ஓட்டிச்சென்றார். திண்டிவனம்-புதுச்சேரி சாலையில், மொளசூர் பெட்ரோல் பங்க் சந்திப்பில் பஸ் சென்றபோது, அதே திசையில் பஸ்சுக்கு முன் சென்ற டேங்கர் லாரி திடீரென இடது பக்கமாக திரும்பியது. இதில் எதிர்பாராதவிதமாக தனியார் பஸ், டேங்கர் லாரி பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பஸ் டிரைவர் செல்வம், பயணிகள் தேவிகா, 50; வருண், 19 ஆகிய மூவரும் காயமடைந்தனர். கிளியனூர் போலீசார் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தனியார் பஸ் ஓட்டுநர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.