/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
/
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் கைது அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கல்
ADDED : ஜன 05, 2025 05:02 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி இறந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பழனிவேல் மகள் லியோலட்சுமி,4; அதே பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வந்தார். லியோ லட்சுமி, நேற்று முன்தினம் பள்ளியில் உணவு இடைவேளையில் விளையாடியபோது, கழிவு நீர் தொட்டியில் விழுந்து இறந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நேற்று காலை 8 மணிக்கு, டாக்டர் கீதாஞ்சலி தலைமையிலான மருத்துவக்குழுவினர் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்து காலை 9.50 மணிக்கு சிறுமியின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த சந்தேக மரணம் பிரிவை, கொலையாகாத மரணம் என்ற பிரிவுக்கு மாற்றம் செய்தனர்.
பள்ளி தாளாளர் எமில்டா,65; முதல்வர் டோமினிக் மேரி,50; ஆசிரியை ஏஞ்சல்,33; ஆகியோரை கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில், எமில்டா, டோமினிக் மேரி ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல் தகுதியோடு இருந்த ஏஞ்சல், விக்கிரவாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சத்தியநாராயணன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் வரும் 10ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ஏஞ்சல், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இறந்த சிறுமி லியோலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பொன்முடி, சிறுமியின் தாய் சிவசங்கரியிடம் முதல்வர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். கலெக்டர் பழனி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம் உடனிருந்தனர்.
சிறுமி இறந்த பள்ளியை, குழந்தைகள் நல அமைப்பு வாரிய ஒருங்கிணைப்பாளர்கள் தேவேந்திரன், ஸ்டெல்லா, சமூக ஆர்வலர் வாசுகி ஆகியோர் ஆய்வு செய்தனர்.