/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துளுக்காணத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்
/
துளுக்காணத்தம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED : ஏப் 17, 2025 05:08 AM
வானூர்: பூத்துறை துளுக்காணத்தம்மன் கோவில் திருவிழா துவங்கியது.
வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் துளுக்காணத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இ
க்கோவில் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி, தினந்தோறும் அம்மன் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் முத்து பல்லக்கிலும், நேற்று காஞ்சி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பூ பல்லக்கிலும் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 17 ம் தேதி சிவன்-பார்வதி பூ பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.
நாளை 18ம் தேதி பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல், இரவு பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை 7;00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷக ஆராதனையும், காலை 10;00 மணிக்கு செடல் உற்சவமும், 23ம் தேதி காத்தவராயன்-கருப்பழகி திருக்கல்யாணம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.