/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரி பேட்மின்டன் போட்டியில் மூன்றாவது இடம்

ADDED : அக் 10, 2024 04:14 AM

திண்டிவனம்: பெண்களுக்கான பேட்மின்டன் போட்டியில், திண்டிவனம் அரசு கல்லுாரி மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பேட்மின்டன் போட்டி கடந்த 4 ம் தேதி திருக்கோவிலுார் கலைக்கல்லுாரியில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் 25க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் திண்டினம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியின் பெண்கள் அணி மூன்றாம் இடம் பிடித்தது.
இதில் கல்லுாரியை சேர்ந்த முதலாம் ஆண்டு கணிதவியல் பயிலும் மாணவி கீர்த்தனா, அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் பேட்மின்டன் அணிக்கு தேர்வாகி உள்ளார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேட்மின்டன் போட்டியில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி இயக்குனர் சிவராமன் ஆகியோரை, கல்லூரி முதல்வர் நாரா யணன் பாராட்டினார்.