sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள்... ஆய்வு!  விரைந்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுரை

/

 திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள்... ஆய்வு!  விரைந்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுரை

 திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள்... ஆய்வு!  விரைந்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுரை

 திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலைய பணிகள்... ஆய்வு!  விரைந்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுரை


ADDED : ஜன 11, 2025 08:10 AM

Google News

ADDED : ஜன 11, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.20 கோடி செலவில்கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையகட்டுமானப் பணிகளை, கலெக்டர் பழனி நேரில் பர்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திண்டிவனம்-சென்னை- சாலையில் நகராட்சி சார்பில் ரூ.20 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணி, சலவாதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி, மேல்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் பழனி, நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், கலெக்டர் கூறியதாவது:

திண்டிவனத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.25 கோடி மதிப்பீட்டில், ஆறு ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில், 50 பஸ் நிறுத்தங்கள், 61 கடைகள், 4 - தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம், ஒரு சைவ உணவகம், ஒரு அசைவ உணவகம், ஒரு - பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்படுகிறது.

மேலும், 10 - காத்திருப்பு கூடம், 6 நேரக் காப்பகம் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறை, 'நான் உங்களுக்கு உதவலாமா அறை' , பஸ் பயண முன்பதிவு அறை, ரயில் முன்பதிவு அறை, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளது.

இதேபோல் மாற்றுத்திறனாளிகள் ஓய்வறை, பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, சுகாதாரபிரிவு அலுவலகம், இலவச சிறுநீர் கழிப்பிடம், நிர்வாக அறை, பதிவு அறை போன்ற கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என தெரிவித்தார். பின்னர், திண்டிவனம் நகராட்சி, சலவாதி ரோட்டில் ரூ.268 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதுவுரை முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விவரம், கழிவுநீர் வரும் வழித்தடங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படும் முறைகள் குறித்து, அலுவவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும், மேல்பாக்கம் ஊராட்சியில், தாட்கோ மூலம் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும், ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டுமானப் பணியினை நேரில் பார்வையிட்டார்.

மாணவர் விடுதியில் தரைதளத்தில் கழிவறை வசதியுடன் கூடிய 9 அறைகளும், முதல் தளத்தில் கழிவறை வசதியுடன் கூடிய 11 அறைகளும், சமையலறை, விடுதி காப்பாளர் அறை உள்ளிட்ட பணிளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, திண்டிவனம் நகராட்சி கமிஷனர் குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வளர்மதி, தாசில்தார் சிவா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us