/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் 27ம் தேதி திறப்பு
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் 27ம் தேதி திறப்பு
ADDED : டிச 15, 2025 06:41 AM

திண்டிவனம்: திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தை வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதால் இறுதிக் கட்டப்பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
திண்டிவனம் - சென்னை சாலை அருகே 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. புதிய பஸ் நிலையத்தில் முன்பகுதியில், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதையில் மட்டும் புதியதாக தார் சாலை போட வேண்டிய பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளது. மற்ற பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தற்போது, பஸ் நிலையத்தின் முகப்பிலுள்ள இரண்டு ஆர்ச்சுகளில் வண்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது.
பஸ் நிலைய வளாகத்தில் 50 பஸ் நிறுத்தங்கள், 61 கடைகள் என அனைத்து அடிப்படை வசதிகளுடன் பஸ் நிலையம் தயார்நிலையில் உள்ளது.
வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய கலெக்டர் அலுவலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் போது, திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையம் எதிரிலுள்ள காலி மைதானம், திறப்பு விழாவிற்காக முதல்வர் வருகையின் போது, விழா மேடை அமைப்பதற்காக சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது

