/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு: கலெக்டர் தகவல்
/
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு: கலெக்டர் தகவல்
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு: கலெக்டர் தகவல்
திண்டிவனம் புதிய பஸ் நிலையம் விரைவில் திறப்பு: கலெக்டர் தகவல்
ADDED : டிச 16, 2025 05:15 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டிவனம் - சென்னை சாலையில், நகராட்சி சார் பில் 25 கோடி ரூபாய் மதிப் பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்க வரும் போது, திண்டிவனம் பஸ் நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இரண்டையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 5:20 மணியளவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், புதிய பஸ் நிலை யத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் முதல்வரால் திறக்கப்பட உள்ளதால், அந்த சமயத்தில் திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய வற்றையும் முதல்வர் திறந்து வைக்க வாய்ப்பு உள்ளது. அதற்காக இறுதி கட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமோ திறக்க வாய்ப்பு உள்ளது. திறப்பு விழா தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்' என்றார். நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கமிஷனர் பானுமதி, பொறி யாளர் புவனேஸ்வரி (பொறுப்பு), நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் கவிதா, தாசில்தார் யுவராஜ் உடனிருந்தனர்.

