/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிப்பர் லாரி டயர் வெடித்து விபத்து
/
டிப்பர் லாரி டயர் வெடித்து விபத்து
ADDED : மே 07, 2025 11:54 PM

வானுார்: கிளியனூர் அருகே ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
மரக்காணம் அடுத்த பெருமுக்கலில் இருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு நேற்று மாலை டிப்பர் லாரி ஜல்லி ஏற்றிச்சென்றது. வளவனூர் சிறுவந்தாடு அரிகிருஷ்ணன், 33; டிரைவர் ஓட்டி சென்றார்.
லாரி, அருவாப்பாக்கம்-கொந்தமூர் அருகே சென்றபோது, டிப்பர் லாரியின் பின்பக்க இடதுபுற டயர் வெடித்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
எதிரில் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். டிப்பர் லாரியில் இருந்த ஜல்லி சாலையில் கொட்டியது.
கிளியனூர் போலீசார், டோல்கேட் ஊழியர்கள், சாலையில் சிதறிய ஜல்லியை ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் அகற்றினர். கிரேன் மூலம் டிப்பர் லாரி மீட்கப்பட்டது.
விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.