ADDED : மே 31, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் இன்று அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று 31ம் தேதி காலை 9.00 மணிக்கு தொடங்கி மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்பதால், விழுப்புரம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இன்று நடக்க இருந்த பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் என, மின்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.