/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பிரம்மதேசம் - ரங்கநாதபுரம் சாலையில் 'அடாவடி' வசூல் : டிப்பர் லாரி உரிமையாளர்கள் புலம்பல்
/
பிரம்மதேசம் - ரங்கநாதபுரம் சாலையில் 'அடாவடி' வசூல் : டிப்பர் லாரி உரிமையாளர்கள் புலம்பல்
பிரம்மதேசம் - ரங்கநாதபுரம் சாலையில் 'அடாவடி' வசூல் : டிப்பர் லாரி உரிமையாளர்கள் புலம்பல்
பிரம்மதேசம் - ரங்கநாதபுரம் சாலையில் 'அடாவடி' வசூல் : டிப்பர் லாரி உரிமையாளர்கள் புலம்பல்
ADDED : நவ 18, 2025 07:10 AM
கி ளியனுார் பகுதியில் டிப்பர் லாரிகளை வழிமறித்து, அடாவடி வசூல் செய்வதாக, டிப்பர் லாரி உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.
வானுார் பகுதியில் கல் குவாரிகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் இருந்து புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜல்லி கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்களை, டிப்பர் லாரி மூலம் கொண்டு செல்கின்றனர்.
இந்த சாலை, வானுார் பகுதியில் இருந்து திண்டிவனம் - கிளியனுார் - புதுச்சேரி சாலை, திண்டிவனம் - மயிலம் - புதுச்சேரி சாலை, திண்டிவனம் - மரக்காணம் சாலை ஆகிய மூன்று நான்குவழிச் சாலைகளையும் இணைக்கும் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது.
கிளியனுார் வழியாக செல்லும் டிப்பர் லாரிகளை பொதுமக்கள் பெயரில் சிலர் வழிமடக்கி, கோவில் திருவிழா நிதி கொடுக்க வேண்டும் என அடாவடி செய்வதாக லாரி டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வானுார் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜல்லிகள் மற்றும் எம்.சாண்ட் போன்ற கட்டுமானப் பொருட்கள், மத்திய, மாநில அரசுகளின் பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள், கிழக்கு கடற்கரை சாலை, விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை, விழுப்புரம் - மயிலாடுதுறை சாலை பணிகளுக்கும் காரைக்கால் துறைமுகம், நெய்வேலி மற்றும் கல்பாக்கம் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் டிப்பர் லாரிகளில் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்கிறோம்.
இந்நிலையில், பிரம்மதேசம் - கிளியனுார் வழியாக செல்லும் டிப்பர் லாரிகளை மடக்கி, சிலர் கெடுபிடி செய்கின்றனர். லாரிகளுக்கான சாலை வரி, கனிம வரி போன்ற வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம். இப்பிரச்னை குறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோருக்கு மூன்று முறை மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை. இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, டிப்பர் லாரி உரிமையாளர்கள் அமைதியான முறையில் தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

