/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் 'டன்' கணக்கில் குப்பைகள் எரிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி
/
சாலையில் 'டன்' கணக்கில் குப்பைகள் எரிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி
சாலையில் 'டன்' கணக்கில் குப்பைகள் எரிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி
சாலையில் 'டன்' கணக்கில் குப்பைகள் எரிப்பு: அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி
ADDED : நவ 18, 2025 07:10 AM
வா னுார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 65 ஊராட்சிகள் அமைந்துள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் குவியும் குப்பைகளை அள்ளுவதற்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினந்தோறும் பொது மக்கள் சாலையோரம் கொட்டும் குப்பைகளை ஒன்று சேர்ப்பது, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து அதற்குண்டான இடத்தில் கொட்டுவது வழக்கம்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும், குப்பைகளைக் கொட்டுவதற்கு சிறிய இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடமும் ஓரிரு நாட்களிலேயே நிரம்பி விடுகிறது. அதன் பிறகு, சாலையில் 'டன்' கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு செல்லும் துப்புரவு பணியாளர்கள், அதனை எங்கு கொட்டுவது என்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
சில கிராமங்களில் அதிகாரிகளின் உத்தரவின் படி, சாலையோரத்தில் ஒட்டுமொத்தமாக கொட்டி எரிக்கின்றனர். அந்த பகுதிகள் முழுவதும் புகைமூட்டமாவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக சுவாச கோளாறு பிரச்னைகள் ஏற்படுகிறது. சாலையோரங்களில் குப்பைகளை எரிக்கும் துப்புரவு பணியாளர்களை பொது மக்கள் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் சரியான இடத்தை ஒதுக்கீடு செய்து தராததால், துப்புரவு பணியாளர்கள் பொது மக்களுக்கு பதில் கூற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குப்பைகளைக் கொட்டுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்து கொடுக்கும் படி பொது மக்கள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், வானுார் ஒன்றிய அதிகாரிகள் மீது பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

