/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவர்களுக்கான 'டாய் ட்ரெயின்' திட்டம்: ஆரோவில்லில் செயலாளர் ஆலோசனை
/
சிறுவர்களுக்கான 'டாய் ட்ரெயின்' திட்டம்: ஆரோவில்லில் செயலாளர் ஆலோசனை
சிறுவர்களுக்கான 'டாய் ட்ரெயின்' திட்டம்: ஆரோவில்லில் செயலாளர் ஆலோசனை
சிறுவர்களுக்கான 'டாய் ட்ரெயின்' திட்டம்: ஆரோவில்லில் செயலாளர் ஆலோசனை
ADDED : அக் 14, 2025 07:44 AM
வானுார்; ஆரோவில்லில் சிறுவர்களை மகிழ்விக்க உல்லாச ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறக்கட்டளை அதிகாரிகள் மற்றும் இந்திய ரயில்வே துறை அதிகாரியுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில்லில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஓரு பகுதியாக ஆரோவில்லில் உள்துறை போக்குவரத்து முறையில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் 'டாய் ட்ரெயின் மற்றும் கிரவுன் டிராம் நெட்வொர்க்' திட்டத்தை துவங்க உள்ளனர்.
இது தொடர்பாக ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் உயர்நிலை கூட்டம் நேற்று நடந்தது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமை தாங்கினார்.
ஆரோவில் நகர வளர்ச்சி குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை அதிகாரிகள் மற்றும் திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே வணிக மேலாளர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப்பின், ஜெயந்தி ரவி கூறியதாவது:
'டாய் ட்ரெயின்' ஆரோவில் நகர திட்டத்தின் கிண்டர் கார்டன் பகுதியைச் சுற்றி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு மகிழ்வான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைக்கப்படும்.
இந்த ட்ரெயின் அன்னை சின்னத்தை மையமாகக் கொண்ட அழகிய வடிவமைப்பில் உருவாகும். 'கிரவுன் டிராம்' என்பது ஆரோவில் கேலக்சி திட்டத்தின் முக்கியமான பகுதியாகும்.
இது குறைந்த வேக மின்சார வாகனமாகச் செயல்படும். இதன் மூலம் எரிபொருள் வாகனங்களை குறைத்து, அன்னையின் 1965ல் குறிப்பிட்ட 'மின்சார, மெதுவான, கூட்டுப் பயணம்' என்ற பார்வையை உண்மையாக்குகிறது.
கடந்த வாரம் டில்லியில் ரயில்வே அமைச்சருடன் இந்த புதிய முயற்சி பற்றிய கலந்துரையாடினோம். விரைவில் தெற்கு ரயில்வே பொறியியல் குழு ஆரோவில்லுக்கு வந்து திட்டத்தின் துவக்கப்பணி யை துவங்க உள்ளனர்.
இவ்வாறு ஜெயந்தி ரவி கூறினார்.