/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : அக் 14, 2025 07:43 AM

திண்டிவனம்: புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த இன்னோவா காரை சோதனை செய்தபோது, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சண்முகசுந்தரம், 59; செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் கண்ணன், 50; ஆகிய இருவரும் புதுச்சேரியிலிருந்து 27 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இ தையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து சண்முகசுந்தரம், கண்ணன் ஆகியோரை கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.