/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாரம்பரிய விவசாய பயிற்சி முகாம்
/
பாரம்பரிய விவசாய பயிற்சி முகாம்
ADDED : செப் 19, 2024 11:26 PM

மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் பாரம்பரிய விவசாய பயிற்சி முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசின் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சி முகாமிற்கு, மயிலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மகாலட்சுமி தலைமை தாங்கி, விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதற்கு இந்த குழு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்திற்கு மிக முக்கியமாக பயன்படும் மீன் அமிலம், பஞ்சகவ்யம், மண்புழு உரம் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
மயிலம் வேளாண் அலுவலர் சத்யா இயற்கை விவசாயம் குறித்து பேசினார்.
முகாமில், 20க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
உதவி வேளாண் அலுவலர் சுதா நன்றி கூறினார்.