/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை
/
ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை
ADDED : அக் 24, 2025 03:24 AM

திண்டிவனம்: ஏரியில் இருந்து அதிகளவில் உபரிநீர் வெளியேறியதால், திண்டிவனம் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால், கிடங்கல் 1 ஏரி நிரம்பி, நேற்று அதிகாலை முதல் உபரிநீர் வெளியேறி வருகிறது. இந்த உபரிநீர் திண்டிவனம் ரயில்வே சுரங்கப்பாதை கீழ் வழியாக நாகலாபுரம், கர்ணாவூர் பாட்டை வழியாக கடலுக்கு செல்கிறது.
அதிகளவில் தண்ணீர் வெளியேறியதால், ரயில்வே சுரங்கப்பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகன போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.
இதனால், திண்டிவனம் பழைய பஸ் நிலையத்திற்கு சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் வராமல், மேம்பாலத்தின் மீது ஏறி சுற்றி சென்றது.
இதேபோல, கிடங்கல் 1 மற்றும் பூதேரி பகுதி மக்கள் மேம்பாலத்தின் மீது ஏறி போலீஸ் நிலையம் வழியாக தங்கள் பகுதிகளுக்கு சென்றனர்.

