/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலப்பணி காரணமாக போக்குவரத்து நெரிசல்
/
மேம்பாலப்பணி காரணமாக போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 08, 2025 10:38 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் மேம்பாலம் கட்டுமான பணி காரணமாக சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் முனை, மேலக்கொந்தை சாலை பிரியும் பகுதி என இரு இடங்களில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் திருச்சி நோக்கியும், சென்னை நோக்கியும் அமைத்துள்ள சாலையில் வாகனங்கள் செல்கின்றன.
வடக்கு பைபாஸ் முனையில் பைக்கு, கார் உள்ளிட்ட வாகனங்களும், மேலக்கொந்தை சாலை பிரியும் இடத்தில் கனரக வாகனங்கள் கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு பகுதி சாலையில் கடந்து செல்கிறது. இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் இவ்விரு இடங்களை கடந்து செல்ல அவதி அடைகின்றன.
சாலையை மெதுவாக கடக்கும்போது, வடக்கு பைபாஸ் முனையில் இருந்து தெற்கு பைபாஸ் முனை வரை 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார இறுதி நாட்களில் சராசரியாக 34 ஆயிரம் வாகனங்கள் சென்னைக்கு செல்லும். நேற்று முகூர்த்த நாள் என்பதால் மாலை 7.30 மணி வரை 42 ஆயிரம் வாகனங்கள் டோல் பிளாசாவை கடந்து சென்றன.
மேம்பால பணிகள் நடக்கும் அரசூர், கெடிலம், இருவேல்பட்டு பகுதிகளிலும் இது போன்று சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக சென்றன.