/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்
/
சாலையில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்
சாலையில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்
சாலையில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 03, 2024 04:31 AM
வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் நிறுத்தாமல், சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வானுார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 2014-15ம் ஆண்டு திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் புதிய பஸ் நிறுத்தம் திறக்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதி, வானுார், கிளியனுாருக்கு முக்கிய பகுதியாக உள்ளது. புதுச்சேரி, மயிலம், சேதராப்பட்டு பகுதிக்குச் செல்லும் பஸ்கள், இந்த வழியாக சென்று வருகிறது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றதால், போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆரோவில் போலீசார் மூலம் அப்பகுதியில் பேரி கார்டுகள் அமைத்து பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் சென்று வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதை மீறி சாலையில் நிறுத்திய பஸ் டிரைவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களாக எந்த பஸ்களும், பஸ் நிறுத்தத்திற்குள் செல்லாமல், சாலையில் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர். இதனால் மீண்டும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு கார், டூ வீலர்களில் செல்வோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, வாகன ஓட்டி கள் சிரமமில்லாமல் செல்ல பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்சை நிறுத்த டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும்.