/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூடுதல் வாகனங்கள் அணிவகுப்பு விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
/
கூடுதல் வாகனங்கள் அணிவகுப்பு விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
கூடுதல் வாகனங்கள் அணிவகுப்பு விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
கூடுதல் வாகனங்கள் அணிவகுப்பு விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 13, 2025 04:02 AM

விக்கிரவாண்டி : தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக வாகனங்கள் அணி வகுத்து சென்றதால் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு, இன்று (13ம் தேதி) முதல் வரும் 17ம் தேதி வரையில், 5 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் சென்னை பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனால், விழுப்புரம் சாலையில் கார், பஸ், வேன், ஆட்டோ,பைக் என வாகனங்கள் சாரை சாரையாக அணி வகுத்து சென்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் கூடுதலாக இரண்டு லேன்கள் திறக்கப்பட்டு (மொத்தம் 8 லேன்கள்) போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதாக கடந்து சென்றன.
விக்கிரவாண்டி டோல் பிளாசாவை நேற்று முன்தினம் சென்னை நோக்கி 19 ஆயிரம் வாகனங்களும், தென்மாவட்டங்களை நோக்கி, 39 ஆயிரம் வாகனங்கள் என மொத்தம் 58 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன. நேற்று 2வது நாளாக இரவு 7:00 மணி வரையில், தென்மாவட்டத்தை நோக்கி 28 ஆயிரம் வாகனங்களும், சென்னை நோக்கி 14 ஆயிரம் வாகனங்கள் என, மொத்தம் 42 ஆயிரம் வாகனங்கள் சென்றன.
விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி டி.எஸ்பி., நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், முத்துராஜ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.