நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதித்தது.
பொங்கல் பண்டிகையான நேற்று, திண்டிவனம் நேரு வீதி, செஞ்சி ரோடு உள்ளிட்ட இடங்களில் கரும்பு, பொங்கல் பானை, மாவிலை, பூமாலை மற்றும் பூஜைக்கான பொருட்கள் விற்பனை நடந்தது. இதே போல் மாட்டுப்பொங்கலுக்காக மாடுகளை அலங்கரிக்கத் தேவையான பொருட்களும் விற்பனையானது. பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் நேற்று மாலை வரை திண்டிவனம் நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, செஞ்சி ரோடு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.