/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தைல மரக்கட்டை லோடு சரிந்து போக்குவரத்து பாதிப்பு
/
தைல மரக்கட்டை லோடு சரிந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 29, 2025 04:49 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே டிப்பரின் அச்சு முறிந்ததால் தைல மரக்கட்டை லோடு சரிந்து போக்குவரத்து பாதித்தது.
விழுப்புரம் அடுத்த மேல்பாதியைச் சேர்ந்தவர் உதயமூர்த்தி, 35; இவர், தனது டிராக்டர் டிப்பரில் கோலியனுாரில் இருந்து விக்கிரவாண்டிக்கு நேற்று காலை தைலமர கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
நேற்று காலை 7:45 மணிக்கு, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வந்தபோது டிப்பரின் அச்சு முறிந்து தைல மரக்கட்டைகள் சாலையில் சரிந்தன. இதனால், திருச்சி - சென்னை சாலையில் போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை புதிய சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, கட்டைகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். 8:15 மணிக்கு போக்குவரத்து சீரானது.