sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கார் மோதி சாலையில் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு

/

 கார் மோதி சாலையில் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு

 கார் மோதி சாலையில் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு

 கார் மோதி சாலையில் விழுந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 18, 2026 04:57 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், ராகவன்பேட்டையை சேர்ந்த எழிலரசன் என்பவர், நேற்று காலை 9:00 மணியளவில், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி டாடா இண்டிகா காரில் வந்தார்.

வளவனுார் சத்திரம் பஸ் நிலையம் அருகே, சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின் கம்பத்தில் மோதியதில், மின் கம்பம் சாலையில் சாய்ந்தது.

அப்போது அவ்வழியே வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காரில் வந்த எழிலரசன் காயமின்றி தப்பினார்.

மின் ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, 20 நிமிடங்களுக்குப் பின் போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us