/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : பிப் 18, 2026 04:55 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் பகுதியில் நடந்த ரவுடி கொலையில், கொலையாளிகளுக்கு பைக் மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்த புதுச்சேரி ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம். ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜவகர், 24; ரவுடி. முன்விரோதம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த ஹேமந்த், அவரது தம்பி வசந்த் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலையில்மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் அடைந்தனர். கைது செய்யப்பட்ட கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை நடந்த அன்று கொலையாளிகளுக்கு பைக்குகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கிய பிரபல ரவுடி புதுச்சேரி குருசுக்குப்பத்தைச் சேர்ந்த குமரன் மகன் புஷ்பராஜ், 27; என்பவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் மீது, புதுச்சேரி ஆம்புலன்ஸ் மாறன் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 5 வழக்குகள் இருப்பது குறிப்பிடத் தக்கது.

