/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாய்களுக்கு கால்நடைத்துறை அறுவை சிகிச்சை
/
விழுப்புரத்தில் நாய்களுக்கு கால்நடைத்துறை அறுவை சிகிச்சை
விழுப்புரத்தில் நாய்களுக்கு கால்நடைத்துறை அறுவை சிகிச்சை
விழுப்புரத்தில் நாய்களுக்கு கால்நடைத்துறை அறுவை சிகிச்சை
ADDED : பிப் 18, 2026 04:53 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கால்நடைத்துறை சார்பில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தெரு நாய்களுக்கான நுாறு கருத்தடை மைய திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழக விலங்குகள் நல வாரியம் இணைந்து வீடற்ற நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட கால்நடைத்துறை மருத்துவமனை நாய்கள் அறுவை சிகிச்சை கூடத்தில் கருத்தடை செய்யும் பணி நடந்தது.
இப்பணியை விழுப்புரம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர் சஞ்சீவி ராஜன், துணை இயக்குநர் செல்வகுமார், அறுவை சிகிச்சை நிபுணர் ரவி ராஜன், தமிழக விலங்குகள் நல வாரிய விழுப்புரம் மாவட்ட விலங்குகள் நல அலுவலர் டாக்டர் செல்வமுத்து ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அறுவை சிகிச்சையை டாக்டர்கள் ஜெயபிரகாஷ் மற்றும் மகேஷ்ராம் செய்திருந்தனர்.
மேலும், இந்த கருத்தடை அறுவை சிகிச்சை முடித்தவுடன் நகராட்சி நாய்கள் காப்பகத்தில் 5 நாட்கள் பராமரிக்கப்பட்டு, மீண்டும் பிடித்த இடத்திலேயே மறுபடியும் விடப்படும்.

