/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தால் பழுதான பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவங்கியது
/
வெள்ளத்தால் பழுதான பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவங்கியது
வெள்ளத்தால் பழுதான பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவங்கியது
வெள்ளத்தால் பழுதான பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவங்கியது
ADDED : டிச 07, 2024 08:05 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரில் வெள்ளத்தால் பழுதான பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
பெஞ்சல் புயல், மழை காரணமாக வெள்ளம் கரை புரண்டோடியது. இதில் வி.சாத்தனுாரில் ஓடை வாய்க்காலில் ஆசூர் சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதனையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் கோட்ட பொறியாளர் உத்தண்டி மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் கவுதம், சாலை ஆய்வாளர் அன்புகொடி மற்றும் சாலை பணியாளர்கள் குழுவினர் ஜே.சி.பி., உதவியுடன் மண் அரிக்கப்பட்ட பகுதிகளில் மணல் மூட்டைகள் மற்றும் ஜல்லி கலவை கொட்டி சிரமைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து துவங்கியது.