ADDED : அக் 26, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9:00 மணிக்கு மழை பெய்தது. சில இடங்களில் காற்றும் வீசியது.
இதனால் புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில், தீவனுார் சந்திப்பு அருகே சாலையோர புளிய மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, அவ்வழியாக யாரும் வராததால் அசம்பாவிதம் ஏதும் இல்லை ஜே.சி.பி., மூலம் மரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

