/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்களவாய் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
/
மேல்களவாய் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
ADDED : டிச 01, 2024 06:06 AM

செஞ்சி : சங்கராபரணி ஆற்றில் மழை வெள்ளம் அதிகரித்து வருவதால் போலீசார் போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் நீர் வரத்து துவங்கியது.
நேற்று மதியத்திற்கு பிறகு செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.
படிப்படியாக நீரின் அளவு அதிகரித்து வருவதால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியது. இதையடுத்து செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா உத்தரவின் பேரில் செஞ்சி போலீசார் பேரிகார்டுகளை கொண்டு தரைப்பாலம் வழியாக ஆற்றில் செல்வதற்கு தடை ஏற்படுத்தினர்.
பொது மக்கள் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த வழியாக சென்று வந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 கி.மீ., துாரம் சுற்று வழியாக திண்டிவனம் ரோடு மேம்பாலம் வழியாக சென்று வந்தனர்.

