/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
/
அ.தி.மு.க., பூத் நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்
ADDED : அக் 12, 2025 04:48 AM

விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு நகர அ.தி.மு.க., சார்பில் பூத் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவரணி செயலாளர் முத்தையன், மாநில ஆவின் தொழிற்சங்க செயலாளர் செல்வம், மாணவரணி செயலாளர் சக்திவேல், வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாலமுருகன், கடலுார் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ், ஜெ., பேரவை செயலாளர் கிருஷ்ணன், இணை செயலாளர் முத்துவேல், நகர பாசறை செயலாளர் நீலமேகம், மாணவரணி செயலாளர் பார்த்தீபன், வர்த்தக அணி செயலாளர் ரகுராமன், இணை செயலாளர் செந்தில்வேலன், வழக்கறிஞர் தமிழரசன், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கலையரசன், வார்டு செயலாளர்கள் பாஸ்கரன், ராஜ்குமார், கலை, மனோகரன், வர்த்தகரணி துணை செயலாளர் தயாளன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.