/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு பணியாளர்களுக்கு எழுத்து தேர்வு
/
கூட்டுறவு பணியாளர்களுக்கு எழுத்து தேர்வு
ADDED : அக் 12, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் மூலம், கூட்டுறவு நிறுவனங்களின் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
அறிவிக்கப்பட்ட 44 பணியிடங்களை நிரப்புவதற்காக விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், நடந்த எழுத்து தேர்வில் பங்கேற்க 1162 தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
இதில், 991 நபர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். இந்த தேர்வை, கண்காணிப்பு அலுவலர் பிருந்தா மேற்பார்வை செய்தார். விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி உட்பட துணை பதிவாளர்கள் பலர் உடனிருந்தனர்.