/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்
/
நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்ப பயிற்சி முகாம்
ADDED : நவ 07, 2025 11:16 PM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில், 7 வது மாநில நிதி ஆணை பரிந்துரை படிவம் நிரப்புவது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, கடலுார் மண்டல உதவி இயக்குநர் முகமது ரிஸ்வான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஷேக் லத்திப் வரவேற்றார். பேரூராட்சிகள் நிர்வாக தலைமை எழுத்தர் நளாயினி, முதன்மை பயிற்றுநர்கள் கணேசன், மருது பாண்டியன், ஜெயபிரகாஷ் செயல் விளக்கம் அளித்தனர்.
கணினி பயிற்சியாளர்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், இஸ்மாயில் ஆகியோர் ஊழியர்களுக்கு 7வது மாநில நிதியாணை பரிந்துரை படிவம் நிரப்புவதற்கு குறித்து பயிற்சி அளித்தனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் என மூன்று மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர்.
இளநிலை உதவியாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

