/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி
/
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி
ADDED : நவ 07, 2025 11:16 PM

கண்டமங்கலம் நவ. 8-: கண்டமங்கலம் ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் அடுத்த நவம்மாள்மருதுார் மிட்டாமண்டக்கப்பட்டு பகுதிகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
வானுார் வாக்காளர் பதிவு அலுவலர் ராஜு, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வித்யாதரன், விழுப்புரம் தாசில்தார் மகாதேவன், ஊராட்சி தலைவர்கள் பிரியதர்ஷினி, ஜெயராணி, ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

