/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் காவலர் பள்ளியில் பயிற்சி வகுப்பு துவக்கம்
/
மயிலம் காவலர் பள்ளியில் பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : டிச 08, 2024 05:23 AM

மயிலம்,: மயிலம் கொல்லியங்குணம் காவலர் பள்ளியில் ஆயுதப்படை பெண் போலீசாருக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கியது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 292 இரண்டாம் நிலை ஆயுதப்படை பெண் போலீசாருக்கு மயிலம் ஒன்றியத்தில் உள்ள கொல்லியங்குணம் காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்புகளை டி.ஐ.ஜி., ஆனி விஜயா தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பயிற்சிப் பள்ளியின் துணை முதல்வர் எட்டியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலின், தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி முகாமில் கன்னியாகுமரி,தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி,தேனி உன்கிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு கவாத்து, சட்டம், துப்பாக்கி சுடுதல், கைரேகை, கமாண்டோ மற்றும் முதலுதவி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.