/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட மாநிலங்களில் பயிற்சி
/
கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட மாநிலங்களில் பயிற்சி
கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட மாநிலங்களில் பயிற்சி
கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட மாநிலங்களில் பயிற்சி
ADDED : டிச 31, 2025 04:28 AM

விழுப்புரம்: கூட்டுறவு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மூலம் தமிழகம் முழுதும் உள்ள விவசாயிகளை வட மாநிலங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்கள், விவசாயிகள் 40 பேர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குநர் தலைமையில் புனேவில் உள்ள மேகா தேசிய மேலாண்மை நிலையத்தில் உள்ள திராட்சை விவசாயம், பதப்படுத்துதல் குறித்து பார்வையிட்டனர்.
நாசிக்கில் உள்ள வெங்கடேஸ்வரா கூட்டுறவு மேலாண்மை உற்பத்தி நிலையத்தில் இயற்கை உரம் மூலம் விவசாயம் செய்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, மேதா தேசிய மேலாண்மை நிலைய பதிவாளர் தர்மராஜ், திராட்சை ஆராய்ச்சி நிலைய விரிவுரையாளர் கிஷோர், வெங்கடேஸ்வரா வேளாண் உற்பத்தி கூட்டுறவு நிறுவன மேலாண் இயக்குனர் அனில் ஷிண்டே மற்றும் தமிழக கூட்டுறவு உறுப்பினர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.

