/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கென்னடி கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
கென்னடி கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : ஜன 08, 2025 06:11 AM

திண்டிவனம் : ரெட்டணை கென்னடி கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மென் திறன் மற்றும் செயல் திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
மயிலம் அடுத்த ரெட்டணை கென்னடி கல்வி நிறுவனங்களான கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.சி., மேல்நிலைப்பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் மென் திறன் மற்றும் செயல் திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தது
பள்ளி தாளாளர் சண்முகம், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். பயிற்சி வகுப்புகளை புதுச்சேரி தனியார் அகாடமியின் திறனாக்க பயிற்சியாளர்கள் காவேரி, கோமதி ஆகியோர் , ஆசிரியர்கள், மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்களுடைய மென் திறன் மற்றும் செயல் திறன் அதிகரிக்கும் வண்ணம் குறித்து வகுப்புக்கள் நடத்தினர்.
பள்ளியின் முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம், பயிற்சியாளர்களை கவுரவித்தார். பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயற்சி வகுப்புக்கள் பயனுள்ளதாக இருந்ததாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.