/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணையம் குறித்த பயிற்சி
/
ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணையம் குறித்த பயிற்சி
ADDED : பிப் 17, 2024 11:47 PM
மரக்காணம்: வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பண்ணையம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடந்தது.
பயிற்சியை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கணேசன் துவங்கி வைத்தார்.
வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் பண்ணையின் முக்கியத்துவம் குறித்தும், விவசாயிகள் சாகுபடிக்கு முன்னர் பசுந்தாள் உரங்களான தக்க பூண்டு, சணப்பை மற்றும் நவ தானிய விதைகளை விதைத்து மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். வரப்பு பயிராக உளுந்து, சூரியகாந்தி, ஆமணக்கு, சாமந்தி ஆகியவற்றை சாகுபடி செய்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்டறிய வேண்டும்.
பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நன்மை செய்யும் பூச்சிகளை அதிக அளவில் கவர்ந்து தீமை செய்யும் பூச்சிகளை அழித்திடவேண்டும்.
மேலும் நோய் தாக்குதல் வராமல் கட்டுப்படுத்த டிரைக்கோ டெர்மா விரிடி, சூடோமோனாஸ் போன்ற நோய்க்காரணிகளை பயன்படுத்திட வேண்டுமென பயிற்சியில் விவசாயிகளிடம் வேளாண்மை துறையினர் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயார் செய்ய மண்புழு உர பாலிதீன் பைகள் வழங்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் வாழ்வரசி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேகா, தங்கம், விஜயலட்சுமி, வாசமூர்த்தி, ஜெயலட்சுமி, பஞ்சநாதன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோவிந்தசாமி, சந்துரு உட்பட பலர் பங்கேற்றனர்.
வேளாண் அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.