/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சட்ட கல்லுாரியில் பயிற்சி பட்டறை
/
சட்ட கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : ஆக 15, 2025 11:06 PM

விழுப்புரம்,; விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரியில் சுற்றுச்சூழல் சட்டத்தில் உருவாகி வரும் புதிய போக்குகள் தலைப்பில் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணலீலா வரவேற்றார். திருச்சி தேசிய சட்டப்பள்ளி பேராசிரியர் அமிர்தலிங்கம், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
குடும்ப நல நீதிமன்றம் மற்றும் மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி ராஜா மகேஷ், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பயிற்சி பட்டறையை நிறைவு செய்தார்.
சட்டக்கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சவிதா, ராமஜெயம் நன்றி கூறினர்.