/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
ADDED : செப் 30, 2025 12:03 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட வருவாய்த் துறையில், நிர்வாக நலன் கருதி முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அ.பிரிவு பானு சித்தலிங்கமடத்திற்கும். விழுப்புரம் கலால் அலுவலகம் வாசுதேவன் வானுார் தாலுகாவிற்கும், திண்டிவனம் கலால் அலுவலகம் சரவணன் கண்டமங்கலத்திற்கும்.
திருவெண்ணெய்நல்லுார் லோகநாதன் அரசூருக்கும், விழுப்புரம் கலால் அலுவலகம் அம்பிகா மரக்காணத்திற்கும்.
வானுார் தாலுகா வெங்கடேஸ்வர பாலாஜி ரெட்டணைக்கும், மரக்காணம் கண்ணன் பிரம்மதேசத்திற்கும், மரக்காணம் பிரபாகரன் திண்டிவனத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேல்மலையனுார் சாமுவேல் சாத்தாம்பாடிக்கும், கண்டாச்சிபுரம் ராஜசேகர் அரகண்டநல்லுாருக்கும், மேல்மலையனுார் செல்வம் தீவினுாருக்கும், திண்டிவனம் கலையரசன் வடசிறுவலுாருக்கும்.
விழுப்புரம் பிற்பட்டோர் அலுவலகம் சமதர்மராஜா விழுப்புரத்திற்கும், கண்டமங்கலம் ஜமீனா விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அ.பிரிவுக்கும், ரெட்டணை கமலக்கண்ணன் கலெக்டர் அலுவலகத்திற்கும்.
பிரம்மதேசம் ரமேஷ் வானுாருக்கும், மரக்காணம் வனமயில் மொரட்டாண்டிக்கும், அரகண்டநல்லுார் சுசீலா விழுப்புரம் (ரயில்பாதை) நிலம் கையக அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஆர்.ஓ., அரிதாஸ் பிறப்பித்துள்ளார்.