ADDED : செப் 20, 2025 07:13 AM

விழுப்புரம் :விழுப்புரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த டிரான்ஸ்பார்மர் மாற்றி அமைக்கப்பட்டது.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே நேருஜி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக நீண்டகாலமாக சாலையை ஆக்ரமித்து, மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது.
அதை அகற்ற விழுப்புரம் போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உள்ளிட்டோர் மின்துறைக்கு கடிதம் அளித்தனர்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி லட்சுணன் எம்.எல்.ஏ., மின்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், அந்த மின்சார டிரான்ஸ்பார்மர் அங்கிருந்து, 10 அடி தொலைவிற்கு அகற்றப்பட்டு, நகர வங்கி சுவற்றின் ஓரமாக மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா, மின்துறை மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் ஆகியோர், புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தனர்.
செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், டிராபிக் இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.