/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழக ஊழியர்கள் மறியல் போராட்டம்
/
போக்குவரத்து கழக ஊழியர்கள் மறியல் போராட்டம்
ADDED : ஜன 23, 2025 05:50 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து கழகத்தினர் பிரச்னையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், ஓய்வு பெற்றோர் பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்காத தமிழக அரசை கண்டித்தும், அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஓய்வு பெற்றோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் மண்டல தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். தலைவர் மூர்த்தி, பொருளாளர் சுந்தரபாண்டியன், துணை பொதுச்செயலர் ஏழுமலை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பகல் 11.30 மணிக்கு, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.