/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்
/
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 14, 2025 03:43 AM

திண்டிவனம் : பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தில் தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, திண்டிவனம் வட்ட ஒருங்கிணைப்பாளர் பூங்கொடி வரவேற்றார்.
சங்க பொறுப்பாளர்கள் சிவகாமி, பூபால், ரபேல்ராஜ், ஆல்பர்ட் வேளாங்கண்ணி, அரவிந்தன், வெங்கட்சுப்ரமணியன், பேராசிரியர் பிரபா கல்விமணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஜன்மான் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் தரத்தை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் உதவியோடு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியார் சமத்துவ புரத்தைப் போன்று அரசே நேரடியாக ஜன்மான் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி திண்டிவனத்திலும், ஆகஸ்ட் 17ம் தேதி செஞ்சியிலும் ரபேல்ராஜ் தலைமையில் மாநாடு நடத்துவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.