/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : அக் 16, 2025 11:27 PM

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.
விழுப்பரம் ரயில் நிலையத்தில், மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக்ராம் நேகி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சியிலிருந்து தானியங்கி ஆய்வு ரயில் மூலம் நேற்று மதியம் 1.00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தார். பின், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணி மற்றும் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ள ரயில் டிக்கெட் புக்கிங் அலுவலகத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள ரயில்வே பார்சல் அலுவலகத்தையும் ஆய்வு செய்து, புதிய கட்டமைப்பு பணிகளின் நிலவரங்கள் குறித்து, அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து, புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.
ஆய்வின்போது, தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிபிரியா, முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் ரமேஷ்பாபு, விழுப்புரம் நிலைய மேலாளர் ரகுராம்மராண்டி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.