ADDED : அக் 21, 2025 09:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: இட்லி கடை நடத்த வண்டி கேட்ட பெண்ணுக்கு எம்.எல்.ஏ., தள்ளுவண்டியை வழங்கினார்.
அனந்தபுரம் பேரூராட்சியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி கண்ணாயிரம்.
இவர் குடும்ப வறுமை காரணமாக இட்லி கடை நடத்த தள்ளுவண்டி வேண்டும் என மஸ்தான் எம்.எல்ஏ., விடம் கோரிக்கை விடுத்தார்
இதையடுத்து எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியிலிருந்து கண்ணாயிரத்திற்கு தள்ளுவண்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், துணைச் சேர்மன் ஜெயபாலன், நகர செயலாளர் சம்பத், பேரூராட்சித் தலைவர் முருகன், அவைத்தலைவர் டாக்டர் கல்யாண் குமார், ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, நிர்வாகி அறிவழகன், கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், அண்ணாமலை, நேரு, செல்வமணி, குமார் ஆகியோர் பங்கேற்றனர்.