ADDED : ஜூன் 30, 2025 03:13 AM
விழுப்புரம்: விழுப்புரம் ஆயுதப்படை போலீசாருக்கு காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் பயற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., ஞானவேல் வரவேற்றார். மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சுதாகர், காசநோய் பரவும் முறைகள், தடுக்கும் விதம் குறித்து பேசுகையில், 'காசநோய் காற்றின் மூலம் பரவக்கூடிய நோய், தொடர் இருமல், இருமும்போது ரத்தம் வருதல், மார்பு வலி, தொடர் காய்ச்சல், எடை குறைதல், சுவாசிப்பதற்கு சிரமம், இரவில் வியர்வை வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோய் பாதிப்பாக இருக்கலாம்.
உடனே, எக்ஸ்ரே, சளி பரிசோதனை செய்து, நோய் அறிகுறிகள் இருப்பின் 6 முதல் 9 மாதங்கள் வரை தொடர்ந்து மருந்து எடுத்துகொண்டால் முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.
காசநோயாளர்களுக்கு மருந்தும், மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும் அரசு வழங்குகிறது. இந்த சேவைகள், மாவட்ட காசநோய் மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது' என்றார். டாக்டர் இமயாதேவி, காசநோய் பணியாளர்கள், ஆயுதபடை போலீசார் பங்கேற்றனர்.