sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டி.வி., நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை பயன்பாட்டிற்கு வந்தது

/

டி.வி., நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை பயன்பாட்டிற்கு வந்தது

டி.வி., நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை பயன்பாட்டிற்கு வந்தது

டி.வி., நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை பயன்பாட்டிற்கு வந்தது


ADDED : டிச 06, 2024 05:04 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ்சத்திரம் பிரதான சாலை நான்கு நாட்களுக்குப் பின், தற்காலிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திருவெண்ணெய்நல்லுார் சுற்று வட்டார பகுதியில் கனமழை காரணமாக கடந்த 2ம் தேதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருவெண்ணெய்நல்லுார் மலட்டாறின் குறுக்கே செல்லக்கூடிய திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ்சத்திரம் பிரதான சாலை, அடியோடு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பொதுமக்கள் 17 கி.மீ., சுற்றிக் கொண்டு விழுப்புரம், பண்ருட்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலையை சீரமைக்ககோரி நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் எதிரொலியாக கிராவல் மணல், ஜல்லி கொட்டி தற்காலிக சாலை அமைக்கும் பணி நடைபெற்று நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் தற்காலிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.






      Dinamalar
      Follow us